தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுப்பிரமணியசாமி கூறியது பற்றி கருத்து சொல்ல முடியாது – பொன் ராதாகிருஷ்ணன்

“தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்” என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்சியில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று வந்த மத்திய கனரக தொழில் கள் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-pon ratha

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கூடாது என்று சுப்பிரமணியசாமி கூறியது பற்றி கருத்து சொல்ல முடியாது. கட்சி தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி போன்ற பொறுப்பில் உள்ளவர்கள் கூறும் கருத்துகளுக்கு மட்டுமே விளக்கம் தரலாம்.

ஆனால் கட்சி பொறுப்பில் இல்லாதவர்கள் கூறிய கருத்துக்கு எந்த விளக்கமும் சொல்ல முடியாது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது குறைந்து உள்ளது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

இலங்கை அரசிடம் இருந்து இந்திய மீனவர்களின் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காவிரி பிரச்சினை

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நல்ல தீர்வு ஏற்பட்டதை போல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பதிலும் தீர்வு காணப்படும்.

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் சிறப்பான முயற்சி எடுத்தார். அதே நேரம் மாநில அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால் தான் அதில் தீர்வை எட்ட முடியும். அந்த வகையில், தமிழக அரசின் முயற்சிக்கு மத்திய அரசின் சிறப்பான ஒத்துழைப்பும் இருந்தது என அவர் கூறினார்.

Comments
Loading...