தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – போரினால் பாதிக்கப்பட்டவர்கள்

வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்ட 133 பெண்களும் 20 அமைப்பினரும் இணைந்து இலங்கை அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தாம், போரினால் மற்றும் வன்முறைகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் உள்நாட்டில் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் என்பவற்றினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதை கண்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.demo

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தில் உண்மையான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளனர். இதன்மூலம் இலங்கையில் உண்மையையும் நீதியையும் கொண்டு வரமுடியும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் 67வது சுதந்திரத்தினத்தின்று வெளியிடப்பட்ட சமாதான பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.எனவே அதனை நிறைவேற்ற வேண்டும். அத்துடன் உள்ளூரில் அமைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அந்த ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் நியாயத்தை எதிர்ப்பார்ப்பதாக வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களும் அமைப்பினரும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

உள்நாட்டில், உண்மையை கண்டறியும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் 28வது மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.

Comments
Loading...