தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுவிசில் குடியிருப்பு ஒன்றில் ஆண் பெண் சடலங்கள் மீட்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில் உள்ள Soulalex என்ற சிறிய கிராமப்புற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.Dead-body

கடந்த திங்கள்கிழமை அன்று இப்பகுதியை சேர்ந்த பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தகவலை பெற்ற பொலிசார் குறிப்பிட்ட அந்த குடியிருப்பில் சோதனை செய்துள்ளனர். அப்போது, ஒரு அறைக்குள் 83 வயதான பெண் மற்றும் 61 வயதான ஆண் ஆகிய இருவரின் சடலங்கள் இருந்துள்ளதை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக சடலங்களை மீட்ட பொலிசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நிகழ்ந்த போது, இது கொலையா அல்லது தற்கொலையா என பொலிசாரால் உடனடியாக கூற முடியவில்லை. எனினும் இதுகுறித்து பொலிசார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், குடியிருப்பில் நிகழ்ந்துள்ள சம்பவத்தில் மூன்றாவது நபரின் தொடர்பு உள்ளதாக எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனரா என்பதும் தற்போது உறுதியாக கூற முடியாது. எனினும், பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு இந்த சம்பவம் குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...