தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி முனையில் தபால் அலுவலகம் கொள்ளையடிப்பு

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி முனையில் தபால் அலுவலகம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரிச், Ebmatingen தபால் நிலையத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் பல ஆயிரம் பிராங்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.armed-men

தபால் ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டி அலுவலகத்தில் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், ஒரு பெண் நிதியில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட கொள்ளையர்கள், ஊழியரின் கைகளை கட்டி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில், ஊழியருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் சாட்சிகள் மற்றும் தடயங்கள் தேடும் பணயில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments
Loading...