தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளத்தின் உதைபந்தாட்டப்போட்டி

சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளத்தினால் நடத்தப்பட்ட உதைபந்தாட்டப்போட்டியில் இளஞ்சிறுத்தைகள் அணி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. நேற்றையதினம் சுவிஸ் basel  மாநகரத்தில் நடைபெற்ற இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 28 கழகங்கள் போட்டியிட்டன.

foot ball

முன்னதாக விடுதலைப்போராட்டத்தின் முதுகெலும்பாக இருந்து வீரச்சாவைத்தழுவிக்கொண்ட பிரிக்கேடியர் சு.ப. தமிழ்செல்வன், லெப்.கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளுடன்  தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இறுதிப்போட்டிகள் ஆரம்பமாகின.

இந்த இறுதிப்போட்டியில் இளஞ்சிறுத்தைகள் அணி மற்றும் தமிழ் இளைஞர் அணி ஆகியன மோதின இதில் இளஞ்சிறுத்தைகள் அணி 4ற்கு பூச்சியம்  என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

இறுதிப்போட்டியில் சிறந்த உதைபந்தாந்தாட்ட வீரராக இளஞ்சிறுத்தைகள் அணியைச் சேர்ந்த குரு தெரிவுசெய்யப்பட்டதுடன் இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின்; சிறந்த கோல்காப்பாளராக தமிழ் இளைஞர் அணியைச் சேர்ந்த துஸ்யந்தன் தெரிவு செய்யப்பட்டடார்.

இவர்களுக்கான வெற்றிக்கேடயத்தினையும் வெற்றிக்கிண்ணத்தையும் விடுதலைப்புலிகளின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் ரகுபதி அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்.

இந்த சுற்றுப்போட்டியில் பெருமளவான விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Comments
Loading...