தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சூரியாவின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார்.
 இதனை  தொடர்ந்து  சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார்

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு கிரிஷ்

மோகன் லாலுடன்    பிரபல தெலுங்கு நடிகரான அல்லு கிரிஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்  படத்தின் படப்பிடிப்புக்கள்  நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
Comments
Loading...