Designed by Iniyas LTD
சூரிய மின்சக்தி கொள்முதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்
சூரிய மின்சக்தி கொள்முதலில் அதானி உள்ளிட்ட 32 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூரிய மின்சக்தி கொள்முதல் செய்வதற்கான நிறுவன தேர்வில் விதிமீறல் நடந்துள்ளதாகவும் எனவே ஒப்பந்தங்களை ரத்து செய்யவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை நீதிபதி எம்எம் சுந்தரேஷ் பிறப்பித்தார். இவ்விவகாரத்தில் பதில் மனு மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகமான டேன்ஜெட்கோ கூடுதல் அவகாசம் கேட்டது. இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்