தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது

அம்பேத்கர் – பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். சென்னை ஐஐடி அருகே மத்திய கைலாஷ் பகுதியில், திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாணவரணி செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கனக்கானோர் பங்கேற்றனர்.thangam

ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அமைப்புக்கு ஆதரவாகவும், பேச்சுரிமைக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், மாணவர் அமைப்பு மீதான தடையை நீக்கக் கோரினர். இது தொடர்பாக தமிழக அரசும் விளக்கமளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி,தடையை நீக்க கோரி ஐஐடி நிர்வாகத்திடம் திமுக மாணவரணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Comments
Loading...