Designed by Iniyas LTD
சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற நபர் கைது
24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளை வைத்து நாட்டிற்கு சட்டவிரோதமாக எடுத்துசென்ற நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தங்கக்க கட்டிகளை தனது பயணப்பையில் மறைத்து எடுத்துசென்றபோதே சந்தேகநபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கொழும்பு பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை
குறித்த சந்தேகநபர் இன்று முற்பகல் 11.50 மணியளவில் சென்னை நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஊடாக இலங்கைக்கு சென்றுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 100 கிராம் பெறுமதியான 4 தங்ககட்டிகளை மீட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
