Designed by Iniyas LTD
சென்னையில் முதன் முதலாக மெட்ரோ ரயிலை இயக்கிய பெண்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன் பிறகு ஆலந்தூரிலிருந்து முதல் ரயிலை ஒரு பெண் இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள அரசு தர்மாம்பாள் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்த ப்ரீத்தி, மெட்ரோ ரயிலை இயக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சென்னை மற்றும் டெல்லியில் பயிற்சி பெற்றார்.
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தின்போதும் ரயிலை, 28 வயதான ப்ரீத்தி முறையாகச் செலுத்தினார். சென்னை மெட்ரோ ரயில் ஓட்டுனர் பணியில் ப்ரீத்திக்கு பிறகு மேலும் 3 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆயத்தமாகி வருகிறார்கள். எனினும், முதல் மெட்ரோ ரயிலை இயக்கியவர் என்ற பெருமையை பிரீத்தி பெற்றுள்ளார்.