Designed by Iniyas LTD
சென்னையில் மே 17 இயக்கம் சார்பில் தமிழர் கடற்கரையில் நினைவேந்தல்!
இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்து 6-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் மெரினாவில் மே 17 இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் வைகோ, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்பட சுமார் 1000 பேர் ஒன்றுகூடி இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர்.
தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இனப்படுகொலை நடைபெற்றது தொடர்பாக இந்தியா, இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
