தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

‘சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது குறித்து விசாரிக்கப்படும்

‘சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது குறித்து விசாரிக்கப்படும்’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.  வாக்காளர்களுக்கு டோக்கன்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களுக்கு நேற்று இரவு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளையும், படிவம் 17ஏ-ல் ஆவணங்கள் இரண்டையும் சரிபார்த்து, இதில் வித்தியாசம் இருந்தால் அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்.  Rajesh-lakkani

காஞ்சீபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் 6 மணிக்கு முன்பாக வாக்காளர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.  வாக்கு சதவீதம் குறைந்தது  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த சிறு, சிறு சம்பவங்கள் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பாக ரூ.35 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 78.02 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் 73.76 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடும் போது, இந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது என்றாலும், கடந்த சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்து வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து இருந்தது.  ஆனால் இந்த தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து உள்ளது. தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல நடத்தியும் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும்.

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவத்தில் அந்த பணம் கோவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அந்தப்பணம் கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பிரதான கிளையில் வைத்து வருமானவரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...