தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னையில் 8 அணிகள் பங்கேற்கும் புச்சிபாபு கிரிக்கெட் போட்டி!

83226தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கல்பாத்தி – ஏஜிஎஸ் அகில இந்திய அழைப்பு புச்சிபாபு கிரிக்கெட் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி நாளை (5-ந்தேதி) தொடங்கி வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது.

இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ரெயில்வே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன், மாவட்ட லெவன், ஐதராபாத் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.50 ஆயிரமும், அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். ஜார்க்கண்ட் அணிக்கு ஆலோசகராக இந்திய ஒருநாள் போட்டி கேப்டன் டோனி செயல்படுவார்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...