தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஆரம்பம்

முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதன் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் லக்சம்பர்க் வீரர் முல்லர் வெற்றி பெற்றார். 

20-வது ஏர்செல் சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் திருவிழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. tennis

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் உலக தர வரிசையில் 47-வது இடத்தில் இருக்கும் லக்சம்பர்க் வீரர் ஜிலெஸ் முல்லர், 87-ம் நிலை வீரர் ரோஜர் வாசெலின்சை (பிரான்ஸ்) சந்தித்தார். 

2½ மணி நேரம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்சம்பர்க் வீரர் ஜிலெஸ் முல்லர் 6-7, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் ரோஜர் வாசெலினை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரியா வீரர் ஹைதர் மவ்ரெர் 3-6, 7-6, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கையில் எதிர்த்து ஆடிய ஸ்பெயின் வீரர் மார்செல் கிரானோலர்ஸ் காயம் காரணமாக விலகியதால் ஹைதர் மவ்ரெர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 

ஒற்றையர் கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் விஜய் சுந்தர் பிரசாத் 2-6, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் உக்ரைனின் மார்ஷென்கோவை தோற்கடித்து ஒற்றையர் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவன் நெடுஞ்செழியன்-ஸ்ரீராம் பாலாஜி 3-6, 6-4, 6-10 என்ற செட் கணக்கில் யென் ஹூன் லு (சீன தைபே)-ஜோனதன் மராய் (இங்கிலாந்து) ஜோடியிடம் தோல்வி கண்டு முதல் சுற்றிலேயே ஏமாற்றம் அளித்தனர்.

Comments
Loading...