தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னை, கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளர்கள் மாற்றப்படலாம்

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இது 32 ஆண்டுகளுக்கு பின் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிகழ்த்திய சாதனையாகும்.  அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல முனைகளாக போட்டியிட்டன.admk

அவைகளின் போட்டியையும், எதிர்ப்பையும், பிரசாரத்தையும் கடுமையாக எதிர் கொண்டு 134 இடங்களை கைப்பற்றியது.  இந்த வெற்றியை அ.தி.மு.க.வினர் ஒரு புறம் கொண்டாடினாலும் எதிர்பார்த்த வெற்றி அமையாது ஒரு குறையாகவும் அமைந்துள்ளது. காரணம் 234 தொகுதிகளிலும் வெற்றி என்ற கோஷத்துடன் அ.தி.மு.க. களம் இறங்கியது. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் முதல் முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  ஆனால் பல முனை போட்டியால் வாக்குகள் சிதறி சில மாவட்டங்களில் கைகொடுத்தாலும் சில மாவட்டங்களில் அது வெற்றியை பாதித்தது. சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் வெற்றி கை நழுவியது.

மிகவும் எதிர்பார்த்த சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் கை கொடுக்கவில்லை. இதே போல் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.  கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் தான் அ.தி.மு.க.வுக்கு கை கொடுத்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பரவலாக சம அளவில் வெற்றி பெற்றுள்ளது.

அ.தி.மு.க.வுக்கு எதிர் பார்த்த வெற்றியை ஈட்டாத மாவட்டங்களில் சரியாக தேர்தல் பணியாற்றாத கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சி தலைமை யோசித்து வருகிறது.  குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம். அவர்களுக்குப் பதில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Comments
Loading...