Designed by Iniyas LTD
செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 5 தமிழர்கள் கைது :ஆந்திராவில் மீண்டும் அட்டூழியம்
ஆந்திர மாநிலத்தின் திருப்பதியில் சிலர் செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றனர். அதன் மதிப்பு ரூ.25 லட்சம் என கூறப்படுகிறது. அவர்களை தடுக்க சென்ற போலீசார் மீது செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றவர்களில் 20க்கும் மேற்பட்டோர் கல்வீசி தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின் செம்மரக்கட்டைகளை எடுத்து சென்றவர்களில் தமிழர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிறுவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.