Designed by Iniyas LTD
செயல்படாத கணக்குகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள தபால்துறை சிறப்பு சேவை
தபால் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்பு கணக்குகளை 3 ஆண்டுகள் செயல்படுத்தாமல் வைத்திருந்தால் அந்த கணக்குகள் செயல்படாத நிலைக்கு (சைலன்ட்) சென்று விடும். அவ்வாறு செயல்படாத நிலையில் உள்ள கணக்குகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள தபால்துறை சிறப்பு சேவை ஒன்றை வழங்குகிறது. 
அதாவது 3 ஆண்டுகள் வரை எந்த வித பரிமாற்றமும் செய்யாமல் சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 30-ந் தேதி வரை 2 மாதத்துக்குள் தபால் அலுவலகங்களில் நடைபெறும் இந்த சிறப்பு சேவை மூலம் தங்கள் கணக்குகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தபால்துறை கேட்டுக்கொள்கிறது. மேற்கண்ட தகவல் இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.