தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

செய்த தவறுகளுக்கு வருந்திய ஒபாமா!

obamaஅமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்ற பின்னர் தான் செய்த தவறு குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மனம் திறந்து பேசியுள்ளார். அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் தனது பதவிக் காலத்தில் லிபியாவில் ஏற்பட்ட புரட்சியை கட்டுப்படுத்தத் தவறியமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
தனது பதவிக் காலத்தில் இடம்பெற்ற இந்தத் தவறினால் பல்லாயிரக்கணக்கான லிபியர்கள் இடம்பெயர்ந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புக வேண்டியேற்பட்டமையையும் சுட்டிக்காட்டினார். தொலைக்காட்சிப் பேட்டியில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், லிபியாவில் இடம்பெற்ற உள்நாட்டுக் கலவரத்தை தடுப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முடிவு சரியானதே. ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட புரட்சியை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா சரியான தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை.
பிரிவினைவாதிகளினால் கலவரங்கள் ஏற்படவும் பின்னர் ஐ.எஸ் அமைப்பு லிபியாவில் காலூன்றவும் தமது நாட்டின் அசண்டையீனம் காரணமாக அமைந்து விட்டதையும் அவர் தனது பேட்டியின் போது வருத்ததுடன் நினைவுகூர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Loading...