Designed by Iniyas LTD
செவ்வாய்க் கிரகத்தின் மிகப்பெரிய புகைப்படம்: மங்கள்யானின் புத்தாண்டு பரிசு
செவ்வாய்க்கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விஞ்ஞானிகளால் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், புத்தாண்டு வாழ்த்துகளுடன், செவ்வாய்க் கிரகத்தின் மிகப்பெரிய புகைப்படம் ஒன்றை எடுத்து பரிசாக அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் முழு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவால் ரூ.450 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மங்கள்யான், சுமார் 15 மாதங்கள் பயணித்து செவ்வாய்க்கிரகத்துக்கு அருகே சென்றடைந்தது.
செவ்வாய் கிரகத்தை மிக அழகாக, இதுவரை எடுக்கப்படாத வகையில் புகைப்படம் எடுத்து அனுப்பிய மங்கள் யானின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சுமார் 2000 முறைக்கு மேல் ரீடுவீட் செய்யப்பட்டுள்ளது. 1,200க்கும் மேற்பட்டவர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது.