Designed by Iniyas LTD
செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் சென்று வர நடவடிக்கை – நாசா விஞ்ஞானி ஆன்டனி ஜீவாராஜன்
செவ்வாய் கிரகத்திற்கு வரும் 2035ம் ஆண்டு மனிதன் சென்று வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நாசா விஞ்ஞானி ஆன்டனி ஜீவாராஜன் தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடியில் தனியார் கல்லூரியில் மனிதன் விண்வெளிக்கு அனுப்புவதற்கு உள்ள வாய்ப்புகள் மற்றும் சவார்கள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நாசாவில் பணியாற்றும் தூத்துக்குடியை சேர்ந்த விஞ்ஞானி ஆன்டனி ஜீவாராஜன் கலந்து கொண்டார்.
அவர் செவ்வாய் கிரகத்தை பற்றியும், நாசாவின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்டனி ஜீவாராஜன், செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டு வருவதாகவும், 2035ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் சென்று வருவதற்கான நடவடிக்கைகளை நாசா எடுக்கும் எனவும் தெரிவித்தார்.