தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சேலத்தில் வி‌ஷ வாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம்: 3 பேர் கைது

201611091747569716_3-arrested-for-2-killed-in-poison-gas-attack-in-salem_secvpfசேலம் நரசோதிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது38). வெள்ளிப்பட்டறை நடத்தி வரும் இவர் அங்குள்ள பெருமாள் கவுண்டர் காலனியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் முன்புறம் தரை நீர்தேக்க தொட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த தொட்டியின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த காங்கிரீட் சிலாப்களுக்கான முட்டு கட்டைகளை அகற்ற தொட்டிக்குள் தொழிலாளிகள் 3 பேர் இறங்கினர்.

இதில் கொண்டலாம்பட்டி வானக்காரனகாடு பகுதியை சேர்ந்த ராஜா (வயது35), கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரியின் பின் பகுதியில் வசித்து வந்த மணி (வயது 40) மற்றும் சத்யராஜ் (வயது 35) ஆகியோர் அங்கு சூழ்ந்திருந்த வி‌ஷவாயு தாக்கி மயங்கினர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டனர். அதற்குள் ராஜா, மணி ஆகிய 2 பேரும் இறந்துவிட்டனர். உயிருக்கு போராடியபடி கிடந்த சத்யராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பேர்லேண்ட்ஸ் உதவி கமி‌ஷனர் விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குடிநீர் தொட்டியின் மேல் பகுதி முழுவதும் கடந்த ஒரு வாரமாக மூடி இருந்ததும், அதை திறந்த உடனே தொழிலாளர்கள் உள்ளே இறங்கியதால் அங்கு பரவியிருந்த வி‌ஷ வாயு தாக்கியதால் 2 பேரும் இறந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சீனிவாசன், கட்டிட காண்டிராக்டரான வீராணம் பாரதிநகரை சேர்ந்த சக்திவேல் (வயது40), சென்டிரிங் மேஸ்திரி வீராணம் மோட்டூரை சேர்ந்த சரவணன் (வயது 30) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கட்டிடம் கட்ட அனுமதி பெற்று கொடுத்த என்ஜினீயர் ஒருவரை போலீசார் தேடிவருகிறார்கள். இறந்த 2 தொழிலாளர்களின் உடல்கள் இன்று பிற்பகலில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments
Loading...