Designed by Iniyas LTD
சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீடு – கர்நாடக தலைமை வழக்கறிஞர் கடிதம்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீடு தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா குமார் கடிதம் எழுதியுள்ளார். மேலும், அவர் சட்டத்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த கடிதத்தின் நகல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார் ஆச்சார்யா தனது கடிதத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டிற்கு உகந்தது என்று பரிந்துரை செய்திருந்தார்.
கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அம்மாநில சட்டத்துறை அமைச்சர் தமது துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டம் வரும் 21-ம் தேதி கூட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம், தலைமை வழக்கறிஞரின் பரிந்துரை கடிதம் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனக் கருதப்படுகிறது.