தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சொந்த காணியில் விவசாயம் செய்ய அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – குச்ச வெளி மக்கள்

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தென்னமரவாடி கிராம மக்கள் தமக்குரிய விவசாய நிலங்களை விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டாம் எனக் கோரி குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னாள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர்.

தாம் யுத்தத்தின் போது பல சொத்துக்களையும் இழந்து மீண்டும் மீளக்குடியமர்த்தப்பட்டும் தமது விவசாயத்தை சொந்த நிலங்களில் செய்ய விடாது பெரும்பான்மை இனத்தவர்கள் தடுத்து வருவதாகவும் அப்பகுதியிலுள்ள விவசாய மக்கள் குறிப்பிடுகின்றனர்.

1936 ஆம் ஆண்டு தொடக்கம் 1966 ஆம் ஆண்டு வரை அரசினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாகவும் பின்னர் யுத்தத்தின் பொது சொந்த இடங்களை விட்டுச் சென்றதாகவும் தற்போது பெரும்பான்மை இனத்தவர்களுடைய காணிகள் எனவும் கூறி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தமது விவசாய நிலங்களுக்கு அருகில் பதவிசிறிபுர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 13 ஆம் கொலனி காணப்படுவதாகவும் அப்பகுதியிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்களினால் தென்னமரவாடி மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் அரச நில அளவை திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளந்து கொண்டிருக்கும் போதே பெரும்பான்மை இனத்தவர்கள் காணிக்குள் காலை வைத்தால் கழுத்தை வெட்டுவோம் என பகிரங்கமாக கூறுகின்றனர்.

மழையை நம்பி விவசாயத்தை மேற்கோள்ளும் எங்களுக்கு எங்களுடைய சொந்த காணியில் விவசாயம் செய்ய அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் நியாயத்தை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுப்பதுடன் காணி தொடர்பான பிரச்சனைகளை கூடிய விரைவில் செய்து தர வேண்டும் என கூறி குச்சவெளி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இம் முறை விவசாயத்தை மேற்கொள்ள அனுமதியை பெற்று தருமாறு பிரதேச செயலாளர் கிரிஸ்நேந்திரன் உறுதியளித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=vyIUT9_0Z3A” width=”560″ height=”315″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=Ftu7TlDfCUE” width=”560″ height=”315″]

Comments
Loading...