Designed by Iniyas LTD
சொந்த காரணங்களுக்காக முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறேன். கவர்னருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்-அமைச்சராக வரும் 7-ம்தேதி அல்லது 9-ம் தேதியில் அவர் தமிழக முதலமைச்சர் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஒ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தன.
இந்நிலையில் முதல்-அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கவர்னருக்கு பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சொந்த காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது தலைமையிலான அமைச்சரவையையும் விடுவிக்குமாறு கவர்னருக்கு பன்னீர் செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.