தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சோனியாவை சிக்க வைக்க இத்தாலி பிரதமரிடம் பேரம் பேசிய மோடி

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சிக்க வைப்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி பிரதமரிடம் பேரம் பேசியதாக வெளியான தகவல்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.    modi

இந்தியாவிற்கு 3600 கோடி ரூபாய் செலவில்12 அதிநவீன ஹெலிகாப்டர்களை விநியோகிக்கும் உரிமையை கடந்த 2010ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனம் பெற்றது. இதற்கான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.   இந்நிலையில் ஐ.நா.சபை பொதுக் கூட்டத்தில்  கலந்துகொள்ள அமெரிக்கா சென்றபோது அங்கு வந்திருந்த இத்தாலி பிரதமர் மேட்டோ ரென்சியிடம் இந்த வழக்கில் சோனியாகாந்திக்கு எதிரான ஆதாரங்களைத் தந்தால் மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கிலிருந்து இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது.

இத்தாலியைச் சேர்ந்த ஆயுத தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.,

Comments
Loading...