தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சோமாலியாவில் கார்க்குண்டுத் தாக்குதல்! 7 பேர் பலி

201701251441440767_7-killed-in-in-Somalia-hotel-attack_SECVPFஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இங்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும்  கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த கூட்டுப்படையினரை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும், வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின்மீது தாக்குதல் நடத்தி, பலரை சுட்டுக்கொன்றும், சிலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மொகடிஷுவில் உள்ள பிரபல ஓட்டல் மீது இன்று அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்டிருந்த காரை ஓட்டிவந்த தீவிரவாதிகள், ராணுவ வாகனத்தின்மீது மோதி இந்த தாக்குதலை நடத்தியதாகவும், பின்னர் துப்பாக்கிகளுடன் ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Comments
Loading...