Designed by Iniyas LTD
ஜடேஜாவிற்கு டோனி ஆதரவு
இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டி சம்பளத்தில் 50% அபராதம் விதிப்பதாக ஐ.சி.சி. அறிவித்தது. 
இதற்கு கேப்டன் தோனியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பி.சி.சி.ஐ.-ன் சட்ட வல்லுனர்கள் ஐ.சி.சி.யின் தடையை எதிர்த்து வரும் ஆகஸ்டு 1-ஆம் தேதி அப்பீல் செய்ய முடிவெடுத்துள்ளனர். 3-வது டெஸ்ட் போட்டி முடிவுக்கு வரும் அன்றைய நாளில் ஆண்டர்சனுக்கு லெவல் 3 தண்டனைகள் வழங்குவது குறித்த விசாரணையும் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக இ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை தரும் நீதித்துறை ஆணையர் கார்டன் லீவிஸ் முன்னிலையில் சவுதம்டனில் இவ்விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், இந்தியாவிலிருந்து ஜடேஜா, கேப்டன் தோனி, அவர்களது பிஸியோதெரபிஸ்ட் இவான் ஸ்பீச்லி மற்றும் பயிற்சியாளர் டன்கன் பிளட்சர் ஆகியோர் வக்கீல்களுடன் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.