Designed by Iniyas LTD
ஜனநாயகத்துக்கு சவால் விடும் போது மௌனமாக இருக்க முடியாது – ரவி கருணாநாயக்க
நாட்டு மக்களைப் பணயம் வைக்கும் வகையில், சிறியதொரு அடிப்படைவாதக் குழு, ஜனநாயகத்துக்குச் சவால் விடும் போது, மக்களின் அரசாங்கம் ஒன்றினால் மௌனமாக இருக்க முடியாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
“ஜனநாயக உரிமைகள் என்ற போர்வையில், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால், அவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சமூகத்தில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தி, அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுடுத்த முனையும் தனிநபர்கள் மற்றும் குழுக்களின் மீது காவல்துறையினர் இன்னும் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.