தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனவரி 2016 முதல் சாவகச்சேரி நீதிமன்றத்தில் தமிழில் வழக்குகள் நடத்தப்படும்

supreme courtஎதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குகள் அனைத்தும் தமிழ்மொழியிலேயே கொண்டு நடாத்தப்படும். இது கட்டாயமான நடைமுறையாகும்.

இது குறித்துச் சாவகச்சேரி நீதமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் இருக்கும் பொலிஸ்நிலையங்களுக்குத் தான் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகச் சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரன் நேற்று நீதியமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

யாழ்.நீதித்துறை தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச  தலைமையில் நேற்று யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் எந்தவொரு நீதிமன்றங்களிலும் பொலிஸாரால் வழக்குகள் தமிழில் கொண்டு நடத்தப்படுவதில்லை. வாக்கு மூலங்களும் தமிழில் பதியப்படுவதில்லை. 600 தமிழ் பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதும் வழக்குகள் தமிழில் கொண்டு நடத்தப்படுவதில்லை. 600 தமிழ் பொலிஸாரும் என்ன செய்கிறார்கள்? சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழக்குகள் அனைத்தும் தமிழிலேயே கொண்டு நடத்தப்படும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இது குறித்துப் பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன். தமிழில் கொண்டு நடத்தப்படாத வழக்குகளை நான் விசாரிக்க மாட்டேன் என்று நீதியமைச்சர் முன்னிலையில் தெரிவித்தார்.

Comments
Loading...