Designed by Iniyas LTD
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை நீதிமன்றத்தால் கூடப் பறிக்க முடியாது – மகிந்த..
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை வேறு ஒருவரும் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் , அதேபோல அரசமைப்புக்கு அமைய அந்த அதிகாரத்தை நீதிமன்றத்தால் கூடப் பறிக்க முடியாது மகிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய – கசாகல, புராண விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதோடு பலாத்காரமாக அரசாங்கத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தால், தங்களை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல என்றும் மகிந்த ராஜபக்க்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சட்டத்திற்கு அமைய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றினால், விட்டுச்செல்ல தாம் தயார் என்றும், ஆனால், பலாத்காரமாக பெற்றுக்கொள்ள முயற்சித்தால் தம்மை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல என்றும் மகிந்த ராஜபக்க்ஷ கூறியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.