தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சரத் பொன்சேகா…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தன்னுடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி தனக்கு அமைச்சு பதவி வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசமைப்பிற்கமைய அமைச்சர் பதவி பிரதமரினால் பெயரிட்ட பின்னர் ஜனாதிபதி அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  அமைச்சர் பதவிகளை அதிகரிப்பதற்காக புதிய யோசனை ஒன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ,

அதனைச் சமர்ப்பித்த பின்னர் மேலும் சில அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு நியமிக்கப்படவேண்டிய அமைச்சர்களில் தனது பெயரும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதற்கமைய  தம்மை  அமைச்சராக நியமிக்கவில்லை எனில் ஜனாதிபதிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும்  சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...