Designed by Iniyas LTD
ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்….
நேற்றியதினம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இரணைமடுவுக்கு சென்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அந் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து வைத்து அபிவிருத்தி செய்யப்பட்டபின் குளத்தினை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
ஆனால் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி வருகை தருவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னதாகவே நிகழ்வு இடம்பெற்ற இரணைமடுகுளத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அங்கு சென்றிருந்தார்.
எனினும் அவர் ஜனாதிபதியுடன் நிகழ்வில் கலந்து கொள்ளாது பொது மக்கள் கூடியிருந்த இடத்திலேயே நின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை அவருடன் கரைச்சி மற்றும் பளை பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோரும் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.
