தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு சென்ற இராணுவ வாகனம் கோர விபத்து- இரு இராணுவ வீரர்கள் பலியானதுடன் 4பேர் காயம்…

முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில்  இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற இராணுவ வாகன கோர விபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலியானதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அந்த நிகழ்விற்கு வருகைதந்த இராணுவ தளபதியின் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கோமாண்டோ படையணி வாகனம் நிகழ்வை நிறைவு செய்த பின்  வவுனியா பகுதி நோக்கி பயணித்த வேளை  விபத்தில் சிக்கியுள்ளது.

முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில்  உள்ள வளைவு ஒன்றில்  வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்காகியுள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

எனினும் விபத்தில்  காயம்மடைந்தவர்களில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற இடத்துக்கு ஊடகவியலாளர்கள் செல்லவிடாது தடுக்கப்பட்டு பல மணி நேரத்தின் பின்னர் அனுமதிக்கப்பட்டனர் வாகனம் இரண்டாக போயுள்ளதோடு ஆயுதங்களும் ஆங்காங்கே சிதறி காணப்பட்டன

சம்பவ இடத்துக்கு வருகைதந்த ர் ஒட்டுசுட்டான் போலீசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

Comments
Loading...