தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதியுடன் கிடைத்த சந்தர்ப்பத்தை சரிவர பயன்டுத்துவோம்- சி.சிவமோகன்

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று (28) காலை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் பங்கு பற்றி உரையாற்றிய வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்  உரையாற்றுகையில் .

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் நீண்டகாலமாக கருக்கொண்டிருக்கின்றது இன்று வெடித்துள்ளது.

மகாவலி அபிவிருத்தி சபையின் ஊடாக தமிழ்மக்களின் காணிகள் அபகரித்துக்கொண்டிருந்தமை அனைவருக்கும் தெரிந்த ஒன்று நாங்கள் இந்த மண்ணின் பாராளமன்ற உறு;பினர்களாக வெறுமனை பாராளமன்றில் இருக்கவில்லை.

அண்மையில் அண்மையில் கடற்தொழில் பிரச்சனை வந்தபோது விமல் வீரவன்சவுடன் வாக்குவாதாத்தில் ஈடுபட்டு எமது உரிமையினை நிலைநாட்டியுள்ளோம்.

நேற்றையதினம் ஜனாதிபதியிடம் இந்த கருத்தினை சொன்னபோது அதாவரு எட்டுபேருக்கு அண்மையில் காணிகள் கொடுக்ப்பட்டுள்ளது என்று சொன்னோம்.

அவர் நேரடியாக தொலைபேசியில் மகாவலி சபையிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சொல்கின்றார்கள் இல்லை என்று அப்போது நாங்கள் சொன்னோம் இல்லை காணிகள் கொடுக்ப்பட்டது உண்மை என்றுசொன்னோம் எங்களுக்கு முன்னாலே அறிவித்தல் கொடுத்திருந்தார் .

அதுகொடுத்திருந்தாலோ கொடுக்காமல் விட்டிருந்தாலோ இத்துடன் நிறுத்திவிட்டு என்னை சந்தியுங்கள் என்று சொல்லியிருந்தார் சந்தித்து கதைத்த பின்னர்தான் அதற்கான முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

நாங்கள் சந்தர்ப்பங்களை பாவிக்காமல் இல்லை அடுத்த சந்திப்பு ஒக்டோபர் 3ஆம் திகதி கிடைக்க இருக்கின்றது புதுக்குடியிருப்பு படையினரின் ஆக்கிரமிப்பு,வட்டுவாகல் காணிப்பிரச்சனை சொல்லி இருக்கின்றோம் எனவே ஒன்டோபர் மாதம் ஜனாதிபதியுடன் கிடைத்த சந்தர்பத்தை சரிவர பயன்டுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Comments
Loading...