Designed by Iniyas LTD
ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்திற்கு சார்பாக பொது பல சேனா
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் சார்பாக வன்முறைகளையும் அச்சுறுத்தல்களையும் கட்டவிழ்த்து விடுவதற்காக பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரரிற்க்கு பாதுகாப்பு செயலளார் 50 டிவென்டர் ரக வாகனங்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு படையினரை சேர்ந்தவர்களே வாகனச்சாரதிகளாக சீருடையின்றி குறிப்பிட்ட வாகனங்களை செலுத்தவுள்ளனர். இராணுவத்தின் இரு பிரிவுகளுக்கு சொந்தமான வெள்ளை நிற டிவென்டர்களே இவ்வாறு பொதுபலசேனாவிற்க்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பிட்ட வாகனங்களில் சில தேரரால் பலவந்தமாக கைப்பற்றப்பட்ட கொழும்பு கிருலப்பனையில் உள்ள காணியொன்றில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனையவை பொதுபலசேனா தலைமையகத்தின் முன்னாள் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுபலசேனா ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்திற்க்கு சார்பாக செயற்படப்போவது உறுதியாகிவரும் அதேவேளை இந்த அமைப்பை தனது பக்கம் இழுக்க ஐக்கிய தேசிய கட்சியும் முயல்வதாகவும், பொதுபல சேனாவை எதிர்த்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது