Designed by Iniyas LTD
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இணையப் பக்கத்தில், இதுதொடர்பான பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதான செய்தி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைகிறது என்றும், இந்த செயல் அரசியல் நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் அர்ப்பணிப்புள்ள பங்காளர் என்ற வகையில், உறுதிப்பாட்டையும் செழிப்பையும் உறுதி செய்வதற்கு, ஜனநாயக அமைப்புகளும், செயல்முறைகளும் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என தாங்கள் நம்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.