Designed by Iniyas LTD
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக மீண்டும் களமிறக்கும் யோசனை நிராகரிப்பு..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக மீண்டு களமிறக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையில் அமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது ,மீண்டும் ஜனாதிபதி மைத்திரியைப் பொதுவேட்பாளராக்கினால் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து ஒன்றாகச் செயற்படலாமெனக்
அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
அதோடு ராஜபக்ஷ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இழுபறி நிலைமை உள்ளதால், மைத்திரியை இப்படிச் செய்யும் பட்சத்தில் அதன் நன்மைகளும் ஐ. தே. கட்சியின் பக்கம் வருமென்றும் சஜித் கூறியுள்ளார்.
இந்நிலையில் பொதுவேட்பாளராக போட்டியிடுமளவுக்கு மைத்ரிக்கு மக்களிடத்தில் செல்வாக்கு இருக்கிறதா என கேள்வியெழுப்பிய பிரதமர், சஜித்தின் கருத்தை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.