தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜப்பான் அமைச்சருடன் மோடி சந்திப்பு

ஜப்பானுடன் வலுவான பொருளாதார உறவை ஏற்படுத்த விரும்புவதாக இந்தியா வந்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.Indian prime minister in Nepal for rare diplomatic visit

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபுமுயோ கிஷிடா, இரண்டுநாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இருதரப்பு நல்லுறவு குறித்து அவர்கள் இருவரும் பேசினர். பின்னர் மோடி வெளியிட்ட ஒரு அறிக்கையில், அண்மையில் நடைபெற்ற ஜப்பான் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் ஷின்ஸோ அபேவுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் முதலீடு செய்ய வரும் ஜப்பான் தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு துணை நிற்பதை மோடி சுட்டிக்காட்டியிருக்கிறார். பயணத்தின் அடுத்தக்கட்டமாக,ஃபுமுயோ கிஷிடா, இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாதுகாப்பு, எரிசக்தி, நெடுஞ்சாலை மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதை அடுத்து இந்த சந்திப்பு நிகழ உள்ளது.

Comments
Loading...