தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜல்லிக்கட்டு நடத்த கோரி தொடர் போராட்டம் நடாத்தும் மதுரை மக்கள்

உலகெங்கும் தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளிலும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையால், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் களையிழந்துள்ளன. இன்றைய மாட்டு பொங்கல் உற்சாகமும் காணாமல் போயுள்ளது.  jalli

ஜல்லிக்கட்டு நடத்த கோரி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள், 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் வாடி வாசல் முன்பு கருப்புக் கொடி ஏற்றி, அப்பகுதி மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.   பாலமேட்டிலும் வாடிவாசல் முன்பு கறுப்புக்கொடி ஏற்றி மக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக, அறிவிப்பு பலகையையும் அவர்கள் நட்டு வைத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து, அவனியாபுரத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வாடிவாசல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பதற்றம் நிலவுவதால் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments
Loading...