தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜிகாதிகளில் சேர ஆர்வம் காட்டும் சுவிஸ் வாலிபர்கள்

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வெளியேறி ஜிகாதிகளின் இயக்கத்தில் சேர முயலும் சுவிஸ் வாலிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து சுவிஸ் புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.isis

அதில், கடந்த மாதத்தில் மட்டும் இரு வாலிபர்கள் சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறி ஜிகாதிகளாக மாற முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை சுவிஸ் நாட்டிலிருந்து 76 பேர் வெளியேறி தீவிரவாத இயக்கங்களில் இணைந்துள்ளனர். இவர்களில் 29 நபர்களுக்கு சுவிஸ் குடியுரிமை உள்ளது. இவ்வாறு ஜிகாதிகளாக மாற விரும்பும் வாலிபர்கள் தெரிவு நாடுகளில் சிரியா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகள் முதன்மையாக விளங்குகிறது. இதற்கு அடுத்ததாக சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விளங்குகின்றன. இந்த 76 நபர்களில் 21 பேர் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.

எஞ்சிய நபர்கள் இன்னும் சர்ச்சைக்குரிய நாடுகளில் தங்கி வருகின்றனர். கடந்த மாதத்தில் ஒரு நபர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு திரும்பி வந்துள்ளார். மேலும், சுவிஸ் நாட்டை விட்டு வெளியேற முயல்வதாக தற்போது 400 பேரை புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், இதில் 60 பேர் விசாரணைக்கு உட்படுத்தும் நிலையில் உள்ளதாகவும் புலனாய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...