தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெற்று வரும் முக்கோணத் தொடர்

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெற்று வரும் முக்கோணத் தொடரில் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் நேற்று மோதின.south_africa_vs_zimbabwe_001

முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 231 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் எடுத்து இருந்த தென் ஆப்பிரிக்க அணி அதன் பின்னர் ஜிம்பாப்வே பந்து வீச்சில் விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. அதிகபட்சமாக குயின்டான் டீ காக் 76 ஓட்டமும், ஹசிம் அம்லா 66 ஓட்டமும் எடுத்தனர்.ஜிம்பாப்வே அணி தரப்பில் உத்சேயா 27வது ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இதன் மூலம் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை பெற்றார்.232 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி 38.3 ஓவர்களில் 170 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டி தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

Comments
Loading...