தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜூலை மாதம் இடம்பெறவிருந்த அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

எதிர்வரும்   ஜூலை 6ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்,மற்றும்  பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் அமெரிக்க அமைச்சர்கள் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைக்கப்பட்டுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

தவிர்க்க முடியாத காரணத்தால்  அமெரிக்கா  இந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைத்துள்ளதாக  இந்தியா வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ தொலை பேசி மூலம் சுஷ்மா ஸ்வராஜை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்படுவதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கு புதிதாக வேறு தேதியை முடிவு செய்ய இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Comments
Loading...