தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெனிவாவுக்கு பயணமான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இன்று (17) அதிகாலை ஜெனிவாவுக்குப் பயணமாகினர்.download (1)

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஜக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்கேற்றுக் கொள்ளும் முகமாகவே இன்று பயணமாகுவதாக அவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்கு பற்றுவதுடன் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களையும் சந்தித்துக் இலங்கை விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளனர்.

இக்கூட்டத் தொடரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கையயின் மனித உரிமைகள் தொடர்பாக முக்கிய உரை ஒன்றை ஆற்றவார் என தெரிய வருகின்றது.

Comments
Loading...