Designed by Iniyas LTD
ஜெனீவா நிலைமை மகாநாயக்கர்களுக்கு விளக்க அமைச்சர்கள் கண்டி பயணம்.

சிறீலங்காவுக்கு எதிராக ஐ.நா. மனிதஉரிமைகள் கவுன்ஸிலில் முன் வைக்கப்பட்டிருக்கும் பிரேரணை,அதனால் எழுந்துள்ள சிக்கல் ஆகியவை குறித்து ஜெனீவாவில் அந்த விடயங்களைக் கையாண்டு வரும் இரண்டு சிரேஷ்ட அமைச்சர்களும் இன்று கண்டியில் இரு மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மனித உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதியும் பெருந்தோட்ட தொழில் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுமே இந்த விளக்கங்களை அளிக்கவுள்ளனர்.மல்வத்தை பீடாதிபதி வண.திப்பெட்டுவாவே ஶ்ரீசுமங்கல தேரர், அஸ்கிரிய பீடாதிபதி வண. உடுகம ஶ்ரீபுத்திரகித்த தேரர் ஆகியோரையே அவர்கள் சந்தித்து விளக்கமளிப்பர்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் என்ன நடைபெறுகிறது என எழுத்து மூலம் இரு பீடாதிபதிகளும் ஜனாதிபதியை வினவினர் என்றும், அதையடுத்தே சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களையும் நேரடியாகக் கண்டிக்கு அனுப்பி நிலைமையை விளக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார் என்றும் கூறப்படுகின்றது.