Designed by Iniyas LTD
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எவ்வாறான பாதிப்புகள் ஏற்படும்- அரசியல் கட்சிகள் கூடி ஆராய்வு
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் என்பது தொடர்பில் இன்று ஜனாதிபதி தலைமையில் சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளன. இந்த பாதிப்புகளை தடுப்பதற்கு மீதமுள்ள இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் ஏதேனும் செய்ய முடியுமா? என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச்சட்டத்தின் அமுலாக்கம் போன்ற விடயங்களும் இதன் போது பரிசீலிக்கப்பட்டன. எனினும் 13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்கும் எண்ணம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு சிறிதும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையானது, விசாரணை தொடர்பில் சிறிலங்காவை வலியுறுத்தும் வகையில் மாத்திரமே அமையும் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. எனினும் இந்த விசாரணைக்காக ஐக்கிய நாடுகள் சபை எந்த பொறிமுறையையும் அமைக்காது என்று ஜனாதிபதி திட்டவட்டமாக நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.