தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெயலலிதா அரசியல் விவகாரங்களை தூண்டி விட்டால் உச்சநீதிமன்றத்திற்கு செல்வேன் – சுவாமி

ஜெயலலிதா அரசியல் விவகாரங்களை தூண்டி விட்டால், மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்வேன் என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கு மேலும் 4 மாதங்கள் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.subramaniam_swamy

இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அரசியல் விவகாரங்களை தூண்டி விட்டால் அவரது ஜாமீனை ரத்து செய்ய நான் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்வேன்.

மேலும், உடல்நலம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றும் இது உச்சநீதிமன்ற உத்தரவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Comments
Loading...