Designed by Iniyas LTD
ஜெயலலிதா இறப்பு குறித்த சந்தேகங்களில் உண்மை இல்லை: வைகோ
ஜெயலலிதாவின் இறப்பு குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களில் உண்மை இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, காஞ்சீபுரம் நகர ம.தி.மு.க. செயலாளர் ஏகாம்பரம் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஜெயலலிதாவின் இறப்பு குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களில் உண்மை எதுவும் இல்லை. அவை பெரிய கட்சிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள்.
எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.7 கோடி வரை அபராதம் விதிக்க சட்டம் கொண்டு வரப்படும் என இலங்கை மந்திரி தெரிவித்துள்ளார்.
இதனை மத்திய அரசு அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வரும் 16–ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராமேசுவரம் பகுதியில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.