Designed by Iniyas LTD
ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், 28 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், இதுவரை நிறைவேற்றப்பட்ட அரசு திட்டங்கள், வெள்ள நிவாரண பணிகள், இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.