தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெயலலிதா மரணத்தில் ஓ.பி.எஸ் நீதி விசாரணை கேட்பது காலம் கடந்த செயல்: டி.ராஜேந்தர்

trமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கேட்கும் நீதி விசாரணை காலம் கடந்த செயல் என்று தெரிவித்தார் லட்சிய திராவிட முன்னேற கழக தலைவர் டி.ராஜேந்தர்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இப்போது சந்தேகம் எழுப்பும் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவி என்கிற முதன்மையான அதிகாரம் கையில் இருந்த போது என்ன செய்தார்.

அதிகாரத்தில் இருந்த போது இந்த நீதி விசாரணைக்கு அவர் குரல் கொடுத்திருந்தால், தமிழக மக்கள் அவருக்கு துணையாக நின்றிருப்பார்கள். அதை விட்டு இப்போது அது பற்றி பேசுவது தும்பை விட்டு விட்டு வாலை பிடித்த கதையாக இருக்கிறது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி பி.எச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். கிட்டத்தட்ட 137 நாட்கள் மவுனம் காத்த பி.எச் பாண்டியன் திடீர் என்று ஜெயலலிதா மரணம் பற்றி சந்தேகம் எழுப்புவது ஏன் என்று கேட்டுள்ளார். இதுவும் சந்தர்ப்பவாத அரசியல் என்றே கருதுகிறேன் என்று தெரிவித்தார் டி.ராஜேந்தர்.

Comments
Loading...