தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெயலலிதா மிகவும் வலிமையான பெண்மணி: அமிதாப் பச்சன் இரங்கல்

amitabhஜெயலலிதா மிகவும் வலிமையான பெண்மணி என்று ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.  அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், ” ஜெயலலிதாஜி மறைவு எனக்கு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.

அவர் மிகவும் வலிமையான பெண்மணி. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய ஒரே மாநிலத்தின் தலைவர். மிகவும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

Comments
Loading...